Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்

திமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்
, செவ்வாய், 14 ஜூன் 2016 (15:48 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் கை கோர்த்து தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மண்ணை கவ்வியது தேமுதிக. விஜயகாந்த் கூட டெபாசிட் இழந்தார். கட்சி தோல்விக்கு திமுகவுடன் கூட்டணி சேராததே காரணம் என்று பல தொண்டர்கள் கூறினர்.

இதையடுத்து தேமுதிக தொண்டர்கள் பலர் திமுகவிற்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட ஏ.வி.ஆறுமுகம் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள்