Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு செக் வைக்கும் திவாகரன் - ஆதரவாளர்கள் கூட்டம் ரத்து

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (13:04 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.


 

 
சசிகலா தன்னை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தி விட்டு சிறைக்கு சென்றவுடன், அதிமுகவின் தலைமை போல் செயல்பட்டார் தினகரன். மேலும், திவாகரன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களை கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடமால் பார்த்துக்கொண்டார். இது திவாகரன் உள்ளிட்டவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
அந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சிறைக்கு சென்று விட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார் தினரன்.
 
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பொதுக்கூட்டங்களை நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் தினகரனின் சொந்த ஊரான மன்னார்குடியிலும் பொதுக்கூட்டம் நடத்த அவர்களின் தரப்பில் போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டது.


 

 
ஆனால், அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்ட திவாகரன், இந்த பொதுக்கூட்டம் நடைபெறக்கூடாது என உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
 
இந்த விவகாரம் தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது புகார்! - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments