புறக்கணித்த தினகரன் ; பொங்கியெழுந்த தீபக் : நடந்தது என்ன?

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (18:38 IST)
இதுநாள் வரை சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், இன்று திடீரெனெ ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளர்.


 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் சரி, மரணமடைந்த பின்பும் சரி, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, சசிகலா தரப்பினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவந்தார். ஆனால், அவரின் சகோதரர் தீபக் எந்த கருத்தையும் தெரிவித்தது இல்லை.
 
ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது கூட, மருத்துவமனையின் உள்ளே தீபா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தீபக்கை சசிகலா தரப்பு தடுக்கவில்லை. மேலும், ஜெ. மரணமடைந்த போது, அவருக்கு இறுதி சடங்கும் செய்யும் வாய்ப்பும் தீபக்கிற்கு கொடுக்கப்பட்டது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின், கட்சி, ஆட்சி மற்றும் அவர் குடியிருந்த போயஸ்கார்டன் ஆகியவற்றை கைப்பற்றும் முடிவில் இருந்த சசிகலா தரப்பு, தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது. அவருக்கு தேவையான சில விஷயங்களையும் மன்னார்குடி தரப்பு செய்து தந்தது. எனவே, ஜெ.வின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என அவர் தொடர்ந்து கூறிவந்தார். சமீபத்தில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க தினகரன் சென்ற போது கூட தீபக் அவருடன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா அத்தையின் சிறை தண்டனைக்கு பின் சதி உள்ளது என பேட்டி கொடுத்தார்.
 
இந்நிலையில், இன்று தீடிரெனெ அவர் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஓ.பன்னீர் செல்வமே மீண்டும் முதல்வராக வேண்டும். போயஸ்கார்டன் வீடு எனக்கும், தீபாவிற்கு மட்டுமே சொந்தம். சசிகலாவிற்கு எப்போது எனது ஆதரவு உண்டு. ஆனால், அவரின் குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. தினகரனுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி இல்லை என பேட்டி கொடுத்துள்ளார்.
 
கட்சியில் சில பதவிகளை அவர் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால், தினகரன் தரப்பு அதை செய்து கொடுக்காததால், அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, ஓ.பி.எஸ் தரப்பு அவரை தங்கள் பக்கம் இழுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தீபக்கின் மனமாற்றம் சசிகலா தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவர் தனது சகோதரி தீபாவுடன் இணைந்து செயல்படுவாரா அல்லது ஓ.பி.எஸ் அணியுடன் இணைவாரா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பணியில் வேகம் காட்டும் தவெக!. விரைவில் வேட்பாளர் பட்டியல்!...

6,000 கோடி ரூபாய் ஊழல்.. மது வியாபாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு..!

4 மாத கர்ப்பிணியாக இருந்து காவல்துறை கமாண்டோ.. கணவரால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்..!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவியா?

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது: விஜய் அறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments