தீபாவிற்கும் தினகரனுக்கும் போட்டி? - பரபரக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (12:01 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி தினகரன் ஆகியோர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.


 

 
மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆர்.கே. நகர். அவரின் மறைவையடுத்து, அங்கு இடைதேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற ஜூன் மாதம் 5ம் தேதிக்குள், அங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். எனவே, வருகிற மே மாதம் அங்கு தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சமீபத்தில் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை நேரில் சந்தித்தார். அப்போது, அவர் அங்கு போட்டியிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். எனவே, தீபா அங்கு போட்டியிட வாய்ப்பிருக்கிறது. 
 
ஜெயலலிதா 2 முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருக்கிறது. எனவே அதிமுக தரப்பில், எம்.ஜி.ஆர் உறவினர்களில் யாரேனும் ஒருவர் அல்லது சசிகலாவின் சகோதரி மகன் தினகரனை அங்கு நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments