Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை சந்திக்க வந்த அமித்ஷா, அருண் ஜெட்லி : செய்தியாளர்களை சந்திக்கவில்லை

ஜெ.வை சந்திக்க வந்த அமித்ஷா, அருண் ஜெட்லி : செய்தியாளர்களை சந்திக்கவில்லை

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (14:44 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வரின் உடல் நிலை பற்றி அறிய பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று மதியம் 2.15 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.


 

 
முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடார்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் மருத்துவமனை சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர். மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அப்பல்லோ வந்தார். அதைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வந்தார்.
 
இந்நிலையில் இன்று பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று மதியம் 2.15 மணியளவில் அப்பல்லோ வந்தனர். அங்கு அதிமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. அதன்பின் 2.40 மணியளவில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து அவர்கள் வெளியே வந்தனர். ஆனால் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதனால், அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்தார்களா என்பது பற்றி தெரியவில்லை.
 
அவர்கள் மீண்டும் 6 மணியளவில் தனி விமானத்தில் டெல்லி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments