Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக-பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும். நடிகர் ராதாரவி

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (06:34 IST)
தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் என்றும் இந்த தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்றும் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் நடிகரும் திமுகவில் சமீபத்தில் இணைந்தவருமான ராதாரவி பேசியுள்ளார்.



 
 
தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ராதாரவி மேலும் பேசியதாவது: டெல்லியில் பட்டினிப்போராட்டம் நடத்தியும், செத்த எலியை தின்னும், அரை நிர்வாணம் போரட்டாம், நிர்வாணப் போராட்டம் செய்தும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஒரு பொருட்டாக் கூட எடுக்காம ஒவ்வொரு நாடா டூர் போயிட்டு இருக்கார் மோடி. இன்னும் மூணே மாசம்தான். அதுக்குள்ள தமிழகத்துல  இந்த ஆட்சி கலைந்து சட்ட மன்றத் தேர்தல் வரும். அதுல அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் போட்டியிட்டாலும் இந்த கட்சிகளை டெப்பாசிட் இழக்கச் செய்து தோற்கடிக்கப் போவது விவசாயிகள்தான். தி.மு.க வை  ஜெயிக்க வைக்கப் போகிறதும் விவசாயிகள் ஓட்டுதான்
 
தமிழகத்துல ஆழமாக கால் ஊன்றி ஆட்சி அமைச்சுடலான்னு பா.ஜ.க நினைக்குது. பா.ஜ.க தமிழகத்துல ஆட்சி அமைக்கணும்னா அதுக்கு 400 வருஷத்துக்கு மேல ஆகும்.
 
இவ்வா|று ராதாவி பேசினார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்