வேளாண் கடன் இலக்கு நிறைவு: பிரணாப் முகர்ஜி

Webdunia
சனி, 12 மார்ச் 2011 (19:56 IST)
2010-11 ஆம் நிதியாண்டில் வேளாண் கடன்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3,75,000 கோடியில் ரூ.3 இலட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கார்ப்பரேஷன் வங்கியின் 106வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பிரணாப், “வேளாண் கடன்களில் குறிப்பாக குறைந்த கால பயிர்க் கடன் அளிப்பு மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் டிசம்பர் வரை 3 இலட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாதங்களில் மேலும் ரூ.75,000 கோடி கடனாக அளிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறேன ்” என்று கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் கடன்களை, குறிப்பாக பயிர்க் கடன்களை மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அப்போது அதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாக மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடைய சங்கி படையால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்..!

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

Show comments