காரணம் தற்போது இப்பகுதியில் முக்கியமாக தேவைப்படும் இந்த நெற்பயிர் அறுவடை இயந்திரம் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத ்த ூர் செல்லும் வழியில் உள்ள செண்பகப ுத ூரில் மா ரன ூர் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
நெற்பயிர் அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.17 லட்சம் ஆகிறது. இவ்வளவு மதிப்புள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான நெற்பயிர் அறுவடை இயந்திரம் எவ்வித பாதுகாப்புமின்றி அனாதையாக ஒரு பொது இடத்தில் நிற்கவைத்து அந்த இயந்திரம் அழியும் நிலையில் உள்ளதை பார்க்கும்போது இப்பகுதி விவசாயிகள் கொதிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த இயந்திரத்தை வேளாண்மைதுறை இப்படி வைத்திருப்பது சரியா என்று வேளாண்மை அதிகாரிகளே நினைத்து பார்க்கவேண்டும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இல்லாமல் அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எண்ணம். நிறைவேற்றுவார்களா வேளாண்மைத்துறை அதிகாரிகள். பொறுத்திருந்து பார்ப்போம்!