Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை நிர்ணயம் மட்டுமே உற்பத்தியை பெருக்கிடாது: வேளாண் ஆணையம்

Webdunia
புதன், 2 மார்ச் 2011 (20:08 IST)
வேளாண் விள ைப ொருட்களுக்கு குறைந்தபட் ச ஆதரவு விலை நிர்ணயிப்பதால் மட்டுமே வேளாண் உற்பத்தி பெருகிடாது என்றும், பாசன வசதி, நீர்தேக்க வசதி, நல்ல விதைகள் ஆகியனவும் மிக முக்கியமானது என்று வேளாண் விளைபொருட்களுக்கான செலவு மற்றும் விலை நிர்ணயித்திற்கான வேளாண் ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

1965 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வேளாண் ஆணையம் ( Agriculture commission for Costs and Prices - CACP) சட்டபூர்வமான அமைப்பாகும். வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்து அரசுக்கு தெரிவிக்கிறது இந்த ஆணையம்.

டெல்லியில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய இந்த ஆணையத்தின் தலைவர் அசோக் குலாத்தி, “வேளாண் உற்பத்திக்கு விலை நிர்ணயம் ஒரு முக்கியமான கருவியாகும். ஆனால் விலை மட்டுமே வேளாண் உற்பத்தியை பெருக்கிடாது. அதற்கு நல்ல விதைகளும், நீர் தேக்கும் மற்றும் பாசன வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும ்” என்று கூறியுள்ளார்.

இந்த அடிப்படைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால்தான் ஆண்டிற்கு 4 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சி சாத்தியமாகும் என்று அசோக் குலாத்தி கூறியுள்ளார்.

2007 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஆண்டிற்கு 4 விழுக்காடு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டை விட 5.4 விழுக்காடு வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

கடலூர் ரயில் விபத்து: சுரங்க பாதைக்கு ஒப்புதல் அளிக்காத ஆட்சியர்? - தவெக விஜய் பதிவு!

டிரம்ப் வரி விதிக்கப்போகும் 15 நாடுகள் பட்டியல்.. இந்தியா பெயர் இருக்கின்றதா?

Show comments