Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறட்சிப் பகுதிகளில் நீடித்த புதிய சாகுபடித் திட்டம்: ஐக்ரிசாட் வகுத்துள்ளது

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2010 (14:38 IST)
இந்தியாவின் வறட்சிப் பகுதிகளில் (வானம் பார்த்த பூமிகள்) அயல் நாட்டு உதவியுடன் நீடித்த புதிய சாகுபடித் திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக வறட்சிப் பகுதிகளுக்கான பன்னாட்டு பயிர் வகைகள் ஆய்வு மையம் ( International Research Institute for Semi Arid Tropics - ICRISAT) அறிவித்துள்ளது.

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் மையம் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், வறுமையை தவிர்ப்போம் என்ற நோக்கிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்போம் என்ற குறிக்கோளுடன், ‘சந்தையை மையமாகக் கொண்ட பரவலான மேம்பாட ு’ (Inclusive Market-Oriented Development - IMOD) எனும் திட்டத்துடன் தனது நீடித்த சாகுபடித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

வறட்சிப் பகுதி விவசாயிகள் புதுமைகளை கையாண்டு உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி, அவற்றிக்கு சந்தை பெறுவதையும் குறிக்கோளாகக் கொண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளது ஐக்ரிசாட்.

“மேம்பாட்டின் பலன்களை வறட்சிப் பகுதி விவசாயிகள் பெறவேண்டும் என்பதே இத்திட்டத்தின் குறிக்கோள ்” என்று ஐக்ரிசாட் தலைமை இயக்குனர் வில்லியம் தார், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Show comments