பத்தாண்டுகளில் 7.50 இலட்சம் டன் உணவு பாழ்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2011 (16:51 IST)
2000 வது ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்களில் மட்டும் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 7.42 இலட்சம் டன் உணவு பாழாகி விணாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலம் தானேயைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலரான ஓம் பிரகாஷ் சர்மா இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து இத்தகவலைப் பெற்றுள்ளார்.

2000 வது ஆண்டு ஏப்ரல் முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பத்து ஆண்டுகளில் 7.42 இலட்சம் டன் உணவுப் பொருட்கள் சேதமடைந்து, பாழாகி, எலி, பறவைகள் தின்றதாலும், முறையான கையாளல் செய்யப்படாததாலும் வீணாகியுள்ளதெனவும், அதன் மதிப்பு ரூ.330.71 கோடி என்றும் இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

இதில் 2000 -01ஆம் நிதியாண்டில்தான் மிக அதிகபட்சமாக 1.82 இலட்சம் டன் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.67.52 கோடியாகும். 2001-02 நிதியாண்டில் இது 0.65 இலட்சம் டன்னாகக் குறைந்தது. ஆனால் அடுத்த நிதியாண்டில் அது 1.35 இலட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

2010-11 ஆம் நிதியாண்டில் இந்த இழப்பு இதுவரை ரூ.3.40 கோடியாக உள்ளதென எப்.சி.ஐ. தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

ஜெர்மனி சென்றுவிட்ட ராகுல் காந்தி.. ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தை கலக்கி வரும் பிரியங்கா காந்தி..!

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

Show comments