நீர் வளத்தை காப்பதே மிகப் பெரிய சவாலாகும்: மாண்டெக் சிங்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2011 (16:43 IST)
நமது நாட்டின் நீர் வளத்தை காப்பதே நாம் எதிர்கொள்ளவுள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சி்ங் அலுவாலியா கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வன பல்கலைக் கழக்கத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மாண்டெக் சிங் அலுவாலியா, “நமது நாடு எதிர்கொள்ளப் போகும் மிகப் பெரிய சவாலாக நீர் வளப் பாதுகாப்பு இருக்கும். எனவே வனப் பாதுகாப்பை நீர் வளங்களின் பாதுகாப்புடன் இணைத்து மேம்படுத்தும் கல்வித் திட்டத்தை இப்பல்கலை உருவாக்க வேண்டும ்” என்று கூறியுள்ளார்.

நமது நாட்டின் மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், நீர் வளம் அதற்கு ஏற்றாற்போல் உயரவில்லை. நீர் வளம் அதிகரிக்காமல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு புதிய சாதனையை நம்மால் எட்ட முடியாது என்று கூறிய மாண்டெக் சிங், நீர் வளங்களை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

Show comments