தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2012 (18:40 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

மார்ச் 8ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தொண்டியை மையமாகக் கொண்டு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளது.

இதனால் மார்ச் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, சென்னை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமானது முதல் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதி கணிப்பின்படியும் மார்ச் 10ஆம் தேதி உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய NRI: 100 கோடி சொத்து இருக்குது.. ஆனாலும் புலம்பல் ஏன்?

மெஸ்ஸியுடன் கைகுலுக்க ரூ.1 கோடியா? அநியாயம் பண்றாங்கய்யா..!

திருமணமான பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கேரள அரசியல்வாதி.. கடும் கண்டனங்கள்..!

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

Show comments