கோபி பகுதியில் இயந்திரம் மூலம் நெற்பயிர் அறுவடை துவக்கம்

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (16:51 IST)
ஈரோடு: ஆட்கள் பற்றாக்குறையால் கோபி பகுதியில் இயந்திரம் மூலம் நெற்பயிர் அறுவடை தீவிரமாக நடக்கிறது.
FILE

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூலம் இருபத்தி ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர்.

நடவு செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயராக உள்ளது. கோபி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது. இதனால் விவசாய பணிக்கு சென்ற கூலியாட்கள் நூற்பு ஆலை மற்றும் கட்டிட பணிக்கு சென்று விட்டனர். பலர் ஈரோடு, திருப்பூர், கோயமுத்த ு õர் என பல்வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

தற்போது கோபி பகுதியில் நடப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் இந்த நெற்பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இதற்காக ஆத்த ு õர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நெற்பயிர் அறுவடை செய்யும் இயந்திரம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் அதிகமாக வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி என்னை விட டேஞ்சர்!.. மேடையில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்..

வழக்கத்திற்கு மாறாக அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள்.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு..!

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments