காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வாய்ப்பு - மழைராஜ்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (19:52 IST)
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஜனவரி 3 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். ஜனவரி 2ஆம் தேதி இரவு முதல் கரூர், சென்னை உள்ளிட்ட ஓரிரு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 4, 5 ஆம் தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை மற்றும் நிலநடுக்க கணிப்பின்படி ஜனவரி 4 அல்லது 7 ஆம் தேதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாப்புள்ளது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? பங்குச்சந்தையில் தாக்கம் இருக்காதே..!

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்லணுமா?!.. தவெகவை சீண்டிய சேகர் பாபு!...

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

Show comments