Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்டோசல்பா‌ன் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை - அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2011 (12:45 IST)
தமிழ்நாட்டில் 'என்டோசல்பான்' பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவ‌ை‌யி‌ல ் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கையின் மீது நடந்த விவா த‌ த்‌தி‌ல ் பே‌சி ய மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் கே.பாலகிருஷ்ணன ், கேரளாவில் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தை விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்க வேண்டும் எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன ், என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள நீதிமன்றம் என்டோசல்பான் பூச்சி மருந்திற்கு தடை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இதனை தடை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் என்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து வைத்துக் கொள்ளவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது எ‌ன்றா‌ர ்.

இதை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு கே.பாலகிருஷ்ணன் பேசுகை‌யி‌ல ், பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் இங்கு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டி.கத்தரிக்காய் சோதனை செய்யப்படுகிறது எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அமை‌ச்ச‌ர ் செங்கோட்டையன ், பி.டி.கத்தரிக்காயை சோதிக்க கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

Show comments