அதிக குளிர் நிலை கோதுமை மகசூலைப் பெருக்கும்: வேளாண் நிபுணர்

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (13:14 IST)
வட இந்தியாவில் தற்பொழுது நிலவும் மிக அதிகமான குளிர் கோதுமை சாகுபடிக்கு உகந்தது என்றும், அது அதிக மகசூலைப் பெருக்கும் என்று பஞ்சாப் வேளாண் பல்கலை பேராசிரியர் கூறியுள்ளார்.

பொதுமான குளிர் காலமும், அந்த நேரத்தில் பொழியும் பனியும் பயிர்களை கருகச் செய்துவிடும் என்றும், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் பஞ்சாப் வேளாண் பல்கலையின் கோதுமை பிரிவு தலைமை பேராசிரியரான இந்து சர்மா, தற்போது பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் கோதுமை பயிர் நன்கு முளை விட உதவும் என்றும், இதனால் மகசூல் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

“இப்போது நிலவும் குளிர் கோதுமைக்கு பயிருக்கு மிகவும் சாதகமானதாகும். இதனால் கோதுமை செடியில் அதிகமான குருத்துகள் தோன்றும், அது இறுதியில் மகசூலை பெருக்கும ்” என்று இந்து சர்மா கூறியுள்ளார்.
ஒரே கோதுமை செடியில் பல குருத்துகள் தோன்றி வளரும், இதனால் செடி பரவி வளரும், வயல் முழுவதும் பயிராக காணப்படும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும் என்று சர்மா கூறியுள்ளார்.

அதிக மகசூல் மட்டுமின்றி, கடுமையான குளிரால் கோதுமைப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் இல்லாமல் போகும் என்பது ஒரு சாதகமான நிலை என்றும் சர்மா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Show comments