Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மீனவனின் வாழ்க்கைப் போராட்டம்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2009 (13:21 IST)
இலங்கையில ் ஈழத ் தமிழினத்த ை இனப ் படுகொல ை செய் த சிறிலங்கப ் படைகள ், கச்சத ் தீவுக ் கடற்பரப்பிற்க ு அருகில ் வந் த மீன ் பிடிக்கும ் தமிழ்நாட்டின ் மீனவர்கள ை சுட்டுக ் கொல்வத ு இந் த ஆண்டிலும ் தடையற்றுத ் தொடர்ந்தத ு.

FILE
நாக ை, புதுக்கோட்ட ை, இராமேஸ்வரம ் என்ற ு தமிழ்நாட்டின ் மீனவர்கள ் சர்வதே ச கடல ் எல்லையில ் எங்க ு மீன ் பிடித்தாலும ் வேகமா ன படகுகளில ் வந்த ு அவர்களைத ் தாக்கும ் சிறிலங்கக ் கடற்படையினர ், சமீ ப காலமா க அவர்களைக ் கண்ணியக ் குறைவா க நடத்துவதிலும ் தீவிரம ் காட்ட ி வருகின்றனர ்.

ஆடைகளைக ் கழற்றச ் சொல்வத ு, கிரீசைச ் சாப்பிடச ் சொல்வத ு, அவர்ள ை குனியச ் சொல்ல ி பிட்டத்தில ் அடிப்பத ு, கெட் ட வார்த்தைகளால ் திட்டுவத ு, அவர்கள ் பிடித்த ு வைத் த மீன்களைக ் கவர்ந்த ு செல்வத ு, படகுகள ை மோத ி சேதப்படுத்துவத ு, வலைகளைக ் கிழித்தெறிவத ு என்ற ு நடுக ் கடலில ் தங்களின ் காட்டுமிராண்டித்தனத்த ை தொடர்ந்துக ் கொண்டிருக்கிறார்கள ்.

ஆனால ், எல்லையைக ் காக்கும ் இந்தியக ் கடலோரக ் காவற்பட ை இந் த ஆண்டிலும ், ‘தமிழ ் மீனவர்கள ் தாக்கப்படுவத ை கண்டுகொள்ளா த மனப ் பக்குவத்துடன ் தனத ு எல்லைப ் பாதுகாப்புப ் பணிய ை தொடர்கிறத ு. இந் த ஆண்டின ் மேலும ் ஒர ு முன்னேற்றம ், 12 கடல ் மைல ் தூரத்திற்க ு மேல ் சென்ற ு மீன ் பிடித் த தமிழ க மீனவர்கள ை இந்தியக ் கடலோரக ் காவற்படையினர ் அடித்த ு உதைத்துள்ளனர ்!

12 கடல ் மைல்களுக்க ு மேல ் சென்ற ு நாட்டுப ் படக ு, இயந்திரப ் படக ு மீனவர்கள ் மீன ் பிடிப்பதைத ் தட ை செய்யும ் கடல ் மீன ் பிடித ் தொழில ் ( முறைபடுத்துதல ் மற்றும ் ஆளும ை) சட் ட வரைவ ு எதிர்க்கட்சிகளின ் எதிர்ப்பின ் காரணமா க மத்தி ய அரசால ் கிடப்பில ் போடப்பட் ட நிலையிலும ், அத ு நடைமுறைக்க ு வந்துவிட்டத ு போல ் இந்தியக ் கடலோரக ் காவற்பட ை இப்பட ி ‘கண்ணி ய ’த்துடன ் நடந்துகொண்டத ு.

FILE
கச்சத ் தீவ ை திரும்பப ் பெற்ற ு தமிழ க மீனவர்களின ் பாரம்பரி ய மீன ் பிட ி உரிமைய ை நிலைநாட் ட வேண்டும ் என்ற ு நாடாளுமன்றத்தில ் எதிர்க்கட்சிகள ் முறையிட்டபோத ு, ‘அத ு முடிந்துபோ ன விடயம ்’ என்ற ு பதில ் கூற ி முடித்த ு வைத்தார ் அயலுறவ ு அமைச்சர ் எஸ ். எம ். கிருஷ்ண ா.

இலங்கையில ் நடந்தத ு இனப ் படுகொல ை என்ற ு இந்தியக ் கம்யூனிஸ்ட ் கட்ச ி உறுப்பினர ் இராச ா பேசுயபோத ு குறிக்கிட் ட மாநிலங்களைவத ் தலைவர ், இனப ் படுகொல ை என் ற வார்த்தைய ை அவைக ் குறிப்பிலிருந்த ு நீக்குமாற ு கூற ி, சிறிலங் க அரசைக ் காப்பாற்றுவத ு இந்தியர்களின ் கடம ை நிரூபித்தார ்.

இப்பட ி மக்களைப ் பாதித் த ஒவ்வொர ு பிரச்சனையிலும ் தமிழ க, இந்தி ய அரசுகளும ், உல க நாடுகளும ், ஐ. ந ா. வும ் இதுநாள்வர ை போட் ட வேடங்களையெல்லாம ் துகிலிறுத்திக ் காட்டியத ு 2009 ஆம ் ஆண்டிம ் பெருமைய ே!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

ஜூஸ் Vs. ஸ்மூத்தி: எது சிறந்தது? - ஆரோக்கிய நன்மைகள் ஒரு முழுமையான பார்வை!

காடை இறைச்சி: சுவையும் சத்தும் நிறைந்த ஆரோக்கிய உணவு!

Show comments