Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களு‌ம் பு‌த்தா‌ண்டு‌ம்!

பெண்களு‌ம் பு‌த்தா‌ண்டு‌ம்!
, திங்கள், 31 டிசம்பர் 2007 (13:50 IST)
இ‌ந்த பு‌த்தா‌ண்டி‌ல் பெ‌ண்க‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு‌ம், பெ‌ண்‌க‌ளிட‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பது‌ம் ப‌ற்‌றி யோ‌சி‌த்த‌தி‌ல் ‌சில தோன்‌றியது.

webdunia photoWD
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நமது சமூகத்தில் பெண்களுக்கு இருந்த பல்வேறு தடைகள் உடைக்கப்பட்டு அவர்களுக்கான உரிமைகளும், அங்கீகாரமும் கிடைத்துவிட்டன.

உடன் கட்டை தடைச் சட்டத்தில் துவங்கி, சொ‌த்‌தி‌ல் சம உ‌ரிமை, பூ‌ர்‌வீக‌ச் சொ‌த்‌தி‌ல் உ‌ரிமை எ‌ன்று நாளை ‌நி‌ச்சய‌ம் ‌நிறைவேறு‌ம் ஆ‌ட்‌‌சி அ‌திகார‌த்‌தி‌ல் 33 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வரை அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமான ஆண்டாகவே அமைந்துள்ளது.

சரி ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போது பெண்களின் எதிர்பார்ப்பாக என்னவெல்லாம் இருக்கும் என்று யோசித்தோம்.

இந்த ஆண்டில் சில மாறவும், சிலவற்றை பெறவும் பெண்கள் ஏங்குகின்றனர்.

அதில், பெண்களை பேரளவிற்கு இல்லாமல் மனதளவில் மதிக்கும் ஆண்க‌ள்.

ஆடை, அலங்காரப் பிரியர்கள் என்று வர்ணிக்கும் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை அழகாக வைத்துக் கொள்வது என்பது எல்லோருக்கும் வராது. அதுவும் ஒரு கலைதான்.

பேருந்து நெரிசலில் பெண்கள் படும் பாடு ஓரளவிற்காவது குறைந்தால் நல்லது.

தனக்காக, தனது வளர்ச்சிக்காக செலவழிக்க தினமும் சில மணி நேரம் கிடைத்தால்...

எதைச் செய்தாலும் குறை சொல்லும் உறவினர்க‌ளி‌ன் மன‌ப்பா‌ங்கு மாற வேண்டும் எ‌ன்று...

குடும்பத்தில் எந்த பிரச்சினையானாலும் சிந்தித்து முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கும் தர வேண்டும் அ‌ல்லது எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்...

நீ செய்றது தப்புன்னு நேருக்கு நேர் சொல்ற தைரியம் எல்லாருக்கும் வரணும்...

என அந்த ஏ‌க்க‌ப் பட்டியல் நீண்டுக் கொண்டு செ‌ல்‌கிறது..

பெண்களிடம் ம‌ற்றவ‌ர்க‌ள் எதிர்பார்க்கும் சிலவற்றைப் பற்றி யோசி‌த்தோ‌ம்?

பேருந்து நெரிசலில் அவஸ்தை படுவது பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும்தான். கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக பெண்களே வந்து ஆண்களை இடித்தாலும் திட்டுவாங்குவது என்னவோ ஆண்கள்தான். அதை மாற்றிக் கொள்வார்களா பெண்கள்? (பெண்களே கோபப்பட வேண்டாம்...)

ஆண்கள் இருக்கை காலியாக இருந்தால் ஜம்மென்று அமர்ந்து வரும் அதே பெண்கள், பெண்கள் இருக்கையில் அமர்ந்து வரும் ஆணை கு‌றி‌ப்பாக பெ‌ரியவ‌ர்களை அனுமதி‌க்க வே‌ண்டு‌ம்.

சாலையில் பெரும்பாலும் விபத்துகளுக்கு காரணமாக இருப்பவர்கள் பெண் வாகன ஓட்டிகள்தான். அவர்கள் இஷ்டம்போல் சாலையைக் கடப்பதும், கட் அடிப்பதும் என சில பெண்களின் அத்துமீறல்கள் அதிகம். தவறை ‌திரு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌சில உ‌யி‌ர்களை‌யாவது கா‌ப்பா‌ற்றலா‌ம்.

இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே போதும்... யானையை விலைக் கொடுத்து வாங்கி அதற்கு ஒரு தங்கூசியை இலவசமாகப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இந்த இலவசப் பிரியம் இந்த ஆண்டிலாவது மாற வேண்டும்.

வேலைக்குப் போகும் பெண்கள் எதையும் திட்டமிட்டு முன்கூட்டியேச் செய்து அரக்கப்பரக்க ஓடுவதை தவிர்க்க வேண்டும் என குடும்பத்தாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவைகள் ஆண்கள் கூறும் குறைகள் அல்ல... ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்வுப் பூர்வமாக யோசி‌க்க வே‌ண்டு‌ம்.

உ‌ண்மை ‌விள‌ங்கு‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil