டிராபிக் ஜாம்
"அவரை ஏன் மானேஜர் அதிகமாக திட்டுறார்?"
"ஆபீசுக்கு ஏன் லேட்டுன்னு கேட்டதுக்கு டிராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டேன்னு சொன்னாராம்!"
"அதனால என்ன?"
"அவர் வீடு ஆபீசுக்கு எதிரேதான் இருக்கு!"
கிழியவே கிழியாது
"எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!"
"அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?"
பைல்ஸ் ஆபரேஷன்
அந்த 24ம் நம்பர் ரூம் பேஷண்ட் ஏன் கத்திகிட்டு கிடக்காரு?
டாக்டருக்கு கூரியர் தபால் கொடுக்க வந்த அவருக்குப் போய் டாக்டர் தப்பா பைல்ஸ் ஆபரேஷன் பண்ணிட்டாராம்.
1, 2 ,3...
டாக்டர்: ராத்திரில தூக்கம் வரல்லேன்னா 1,2,3... எண்ணினா தூக்கம் வரும்னு சொன்னேனே செஞ்சு பாத்தீங்களோ?
நோயாளி: பிரயோஜனம் இல்ல டாக்டர். 46,000 வரைக்கும் எண்ணினேன்.. ஆனா அடுத்த நாள் வந்துருச்சு.
குடிப்பழக்கம்
டாக்டர்: உடனடியா நீங்க குடிப்பழக்கத்தை நிறுத்தறது நல்லது.
ஏன் டாக்டர்?
உங்களுக்கு ரத்தப் பரிசோதனையே செய்ய முடியல. எப்ப ரத்தம் எடுத்தாலும் உடனே ஆவியாயிடுது.