Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2007-ல் விளையாட்டில் நிமிர்ந்து நின்ற இந்தியா!

2007-ல் விளையாட்டில் நிமிர்ந்து நின்ற இந்தியா!
, திங்கள், 31 டிசம்பர் 2007 (11:21 IST)
2007 ஆம் ஆண்டு கிரிக்கெட் மட்டுமின்றி பிற விளையாட்டுகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது மகிழ்ச்சிக்குறியதாகும்.

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற டோலா பானர்ஜி!

webdunia photoWD
துபாயில் நடந்த உலக வில் வித்தைபபோட்டியில் மகளிர் தனி நபர் ரீகர்வ் போட்டியில் இந்திய வீராங்கனை டோலா பானர்ஜி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது பெருமைக்குறியதாகும்.

இப்போட்டிகளின் துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவிலதுவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்துள்ளது. இவற்றிலெல்லாம் வெற்றி பெற்று கடைசியாக துபாயில் நடந்த இறுதிச் சுற்றுபபோட்டிகளுக்கு டோலா பானர்ஜி தகுதி பெற்றுள்ளார்.

இறுதிச் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஒரஇந்திய வீராங்கனையான டோலா பானர்ஜி, ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான போட்டிகளைசசந்தித்துள்ளார். அரையிறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108-106 என்புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை யூனயங் சோய்யின் கடுமையான சவாலை எதிர்கொண்டு 110-109 என்ற புள்ளிகள் கணக்கிலவெற்றிபெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் நடந்த வில்வித்தைபபோட்டிகளில் டோலா பானர்ஜி பல முறை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளாரஎன்றாலும், உலக அளவில் நமது நாட்டவர் இப்பெருமையைப் பெறுவது இதுவே முதலமுறையாகும்.

ரஷ்யா, கொரியா போன்ற நாடுகளில் உள்ளதபோன்றோ அல்லது அந்நாட்டு அரசுகள் அளிக்கும் உதவிகள் மற்றும் வசதிகளோ இல்லாத, கிட்டாத நமது நாட்டில் இருந்துச் சென்று உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதென்பதநிச்சயம் கற்பனைக்கூட எட்டாத்துதான். அதனை டோலா பானர்ஜி சாதித்துள்ளதுதானஆச்சரியப்படவைக்கிறது.

கால்பந்து : நேரு கோப்பை வெற்றி!

webdunia
webdunia photoWD
கால்பந்தில் இந்த ஆண்டு இந்தியா அபாரமாக பல சாதனைகளைப் புரிந்தது. ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓ.என்.ஜி.சி. நேரு கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது பெருமைக்குரிய சாதனையாகும்.

இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிரியா அணியைச் சந்தித்த இந்தியா 1- 0 என்ற கோல் கணக்கில் வேற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய கால்பந்து வரலாற்றில் இது ஒரு புதிய துவக்கம் என்றே கூறலாம்.

உலக கால்பந்து தர வரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னனியில் உள்ள சிரியா கால்பந்தாட்ட அணியை இந்திய அணி வென்றது, கால்பந்தாட்டத்தில் நமது நாடு முன்னேறிவருவதற்கான அறிகுறியாகும்.

இந்த வெற்றியைப் பாராட்டி இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சோம் நாத் சாட்டர்ஜீ இந்திய கால்பந்து அணித் தலைவர் பைச்சுங் பூட்டியாவிற்கு தனது வாழ்த்துக்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் உலக செஸ் சாம்பியன்!

webdunia
webdunia photoWD
செஸ் போட்டிகளில் 2007 ஆம் ஆண்டு இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்றே கூறவேண்டும். இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் வென்றதோடு, முதல் முறையாக உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துச் சாதனை புரிந்தார். மேலும் இ.எல்.ஓ. தரவரிசையில் முதன் முதலாக 2800 புள்ளிகளை பெற்ற இந்திய செஸ் வீரர் என்ற பெருமையையும் எட்டினார்.

அதே போல் மகளிர் பிரிவு செஸ் போட்டிகளில் கொனேரு ஹம்ப்பி 2007 ஆம் ஆண்டு சில சாதனைகளை படைத்தார். இ.எல்.ஓ. தரவரிசையில் 2600 புள்ளிகளை அவர் பெற்றது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். ஏனெனில் ஹங்கேரிய செஸ் வீராங்கனை ஜுடித் போல்காருக்கு பிறகு 2600 புள்ளிகளை பெற்ற 2வது செஸ் வீராங்கனை என்ற பெருமையை ஹம்ப்பி பெற்றார். மேலும் கொனேரு ஹம்ப்பிக்கு இந்த ஆண்டுதான் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

மற்றொரு வீரரான கிருஷ்ணன் சசிகரன் 2700 இ.எல்.ஓ. புள்ளிகளை பெற்றது ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். ஆனால் அதன் பிறகு அவரது ஆட்டம் சோபிக்காமல் போனது வருத்தத்திற்குரியது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் 4வது சுற்று வரை முன்னேறிய ஒரே இந்திய செஸ் வீரர் என்ற பெருமையை கிருஷ்ணன் சசிகரன் பெற்றார். மற்றொரு செஸ் வீரர் ஆர்.பி. ரமேஷ் காமன்வெல்த் செஸ் கோப்பையை வென்றதன் மூலம் 2007 ஆம் ஆண்டு இந்திய செஸ் தனது பொற்காலத்தை எட்டியது என்று கூறலாம்.

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா!

webdunia
webdunia photoWD
இந்திய ஹாக்கி கடந்த சில ஆண்டுகளாக சரிவுகளை சந்தித்து வந்த போதிலும் 2007 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பலமான தென் கொரியா அணியை 7- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.

மேலும் 2007 இல் இந்திய ஹாக்கி பயிற்சியாளர் ஜோக்கிம் கர்வால்ஹோ தலைமையில் இந்திய அணி குறிப்பிடத் தகுந்த உயர்வை எட்டியது என்று கூறலாம்:

1. மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையில் ஆஸ்ட்ரேலியா, மலேசியாவிற்கு அடுத்த படியாக 3வது இடத்தை இந்தியா கைப்பற்றியது.

2. பெல்ஜியத்தில் நடைபெற்ற மிக முக்கியமான சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் அர்ஜென்டீனா, நியூ ஸீலாந்து அணிகளுக்கு அடுத்தபடியாக 3வது இடத்திற்கு இந்தியா வந்தது.

3. சென்னையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்றது.

2007 ஹாக்கி சாதனைச் சுருக்கம்!

இந்திய அணி 2004ல் மொத்தம் 14 வெற்றிகளை பெற்றுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய அணி இந்த ஆண்டில் அடித்த மொத்த கோல்கள் 82. வாங்கிய கோல்கள் 24.

இந்த ஆண்டு அதிக கோல்களை அடித்த இந்திய வீரர் பிரப்ஜோத் சிங். இவர் 20 கோல்களை அடித்தார்.

ஆச்சரியப்படவைத்த சானியா!


webdunia
webdunia photoWD
மகளிர் டென்னிஸ் உலகில் இந்தியாவின் நிரந்தர சவாலாக திகழ்ந்துவரும் சானியா மிர்ஸா, இந்த ஆண்டு உலக மகளிர் தர வரிசையில் 27 வது இடத்திற்கு முன்னேறி தனது திறமையை மீண்டும் பறைசாற்றினார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஹாப்மேன் கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி அசத்திய சானியா, தேச சாம்பியன் ரோஹன் போப்பன்னாவுடன் இணைந்து கலப்பு இரட்டையருக்கான போட்டிகளில் குரேஷியா, செக் குடியரசு அணிகளை வீழ்த்தினார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெற்று 3 மாத ஓய்விற்குப் பிறகு மீண்டும் ஆடவந்த சானியா, ஃபிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் முதல் சுற்றில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 2வது சுற்றில் நாடியா பெட்ரோவாவிடம் தோற்ற சானியா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மிக அபாரமாக ஆடினார்.

உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள டாட்டியானா கோலோவின், பேட்டி ஸ்னைடர், ஷாஹன் பியர், மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோரை சானியா வென்று மேம்பட்டுவரும் தனது திறனை ஓரு அச்சுறுத்தலாக மற்ற வீராங்கனைகளுக்கு விடுத்தார்.

இந்த ஆண்டில் மட்டும் மூன்று சர்வதேச போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறிய சானியா, ஒரு போட்டியில் இறுதிக்கும் முன்னேறினார். சானியாவின் ஆட்டம் உலக டென்னிஸ் அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

கார் பந்தய கார்த்திகேயன்!

webdunia
webdunia photoWD
2006 ஆம் ஆண்டு ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ பந்தயங்களில் பங்கேற்று தாய் நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த நாராயன் கார்த்திகேயன், சமீபத்தில் சீனாவில் நடந்த ஜூஹாய் சர்வதேச ஏ 1 கார் பந்தயத்தில் மிகச் சிறப்பாக ஓட்டி இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தார்.

பேட்மின்டனில் பெருமை சேர்த்த அனுப் ஸ்ரீதர்!

பேட்மின்டனில் இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் பதுகோனே. அவருக்கு இணையாக மற்றொரு வீரரை இந்தியா உருவாக்கவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கியவர் புல்லேல கோபிச்சந்த்.

அந்த பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் அனுப் ஸ்ரீதர். ஆசிய சாம்பியன் போட்டியில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த வீரரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான டஃபிக் ஹிதாயத்தை அனுப் ஸ்ரீதர் தோற்கடித்தார்.

அதன் பிறகு நடந்த உலக சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் ஹஃபீஸ் ஹாசிமை தோற்க்கடித்த ஸ்ரீதர், சாம்பியன் பட்டம் வென்ற சீன வீர ர் லின் டானிடம் கடுமையாகப் போராடித் தோற்றார். பிரகாஷ் பதுகோன் பள்ளியில் பயின்றுவரும் ஸ்ரீதர், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒலிம்பிக் போட்டிகளில் திகழ்வார் என நிச்சயம் நம்பலாம்.


Share this Story:

Follow Webdunia tamil