Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007 : கட்டணத்தை உயர்த்தாமல் சாதனை படைத்த இந்திய இரயில்வே....

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (19:55 IST)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்து அமைச்சரவை பட்டியல் வெளியான போது லாலு பிரசாத் பெயர் இரயில்வே துறை அமைச்சராக இடம் பெற்ற போது ஊடகங்கள ், அரசியல் கட்சிகள ், அரசியல் நோக்கர்கள ், ஏன் பெரும்பாலான மக்களும் கூட லாலு இந்திய இரயில்வேயை பீகாரைப் போன்று ஆக்கிவிடுவார் என்றெல்லாம் ஆருடம் கூறியதை எல்லாம் தூள் தூளாக்கி தனக்கே உரித்தான பாணியில் ஆருடம் கூறியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

பயணிகள் இரயில் கட்டணத்தை உயர்த்தாத நிலையிலும் இந்திய இரயில்வே 21,000 கோடி உபரி நிதியை கையிருப்பில் வைத்திருக்கும் அளவுக்கு லாலு திறமையாகத்தான் இரயில்வே நிர்வாகத்தைக் கையாண்டுள்ளார். வருவாய் பெருக்கம ், பயணிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வசதிகள் செய்து தருவது என 2007 ஆம் ஆண்டில் இரயில்வே பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

70 நாள ் ஊக்கத ் தொக ை ஊழியர்களுக்குவழங்கப்பட்டிருப்பது இதுவரை இரயில்வே வரலாற்றில் இல்லாத ஒர் புதிய சாதனை. இதன் மூலம் இரயில்வேயின் மணிமகுடத்தில் லாலு மற்றொரு வைரக்கல்லை பதித்துள்ளார். இந்நிலையில் வரப்போகும் 2008 -ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதி நிலை அறிக்கை தாம் இதற்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவற்றை எல்லாம் விட பயணிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார ்.

ஐந்தாவது ஆண்டாக 2008 ஆம் ஆண்டிலும் இரயில் கட்டணம் உயர்த்தப்படாது என்ற மக்களின் எதிர்பார்ப்பை லாலு நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனைகளின் ஆண்டு மட்டுமல்ல 2007, பல்வேறு பயணிகள் நலன் சார்ந்த வசதிகளை 2008 -ல் அறிமுகப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளும் இரயில்வேயால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரயில்வேயை நவீனப்படுத்துவத ு, பயணிகளுக்கு வசதிகளை உருவாக்கித் தருவது தான் இரயில்வே நடவடிக்கையில் பிரதானமான ஒன்றாக 2007 -ல் இடம் பெற்றிருந்தது. புத்தாண்டில் குறுந்தகவல் ( SMS) மூலம் பயணச் சீட்டு பெறுவத ு, சில அதிவிரைவு இரயில்களில் தானியங்கி பணம் பெறும் இயந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சில முக்கிய இரயில்களில் பயணிகள் பயணத்தின் போது தொலைக் காட்சி பார்க்கும் வகையில் முன்னோடித் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த இரயில்வே திட்டமிட்டு வருகிறது.

இரயில்வேயின் இந்த மாற்றம ், வளர்ச்சி தொடர்பாக தெரிந்து கொள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்கள் தவி ர, பாகிஸ்தான ், வங்கதேசம ், ஆப்பிரிக்க நாடுகளைசேர்ந்த நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. 2007 ஆம் ஆண்டை இரயில்வே நிர்வாகம் சுத்தமான ஆண்டாக கடைப்பிடிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்த நிலையில் பெரும்பாலான விரைவ ு, அதிவிரைவு இரயில்களில் சுகாதாரமற்ற உணவு விநியோகம ், அழுக்கு படர்ந்த போர்வை விரிப்புகள ், அருவறுக்க தக்க நிலையில் கழிவறைகள ், கரப்பான் பூச்சிகளின் ஆதிக்கம் என்ற நிலையே காணப்பட்டது.

டெல்ல ி, ஹவுர ா, அசன்சால ், சென்னை ஆகிய நகரங்களில் சுத்தப்படுத்தும் பணியை யுரேகா போஃர்ப்ஸ் நிறுவனம் உள்ளிட்ட சில பெரிய நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனை வழக்கமாக மேற்கொள்ளும் இரயில்வே ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ப ா.ஜ. க. ஆட்சியின் போது இரயில்வே அமைச்சராக இருந்ந நிதிஷ் குமார் இரயில்வே பாதுகாப்புப் பணிகளுக்கு ஒதுக்கிய 17,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல ், சமிங்கை மேம்பாட ு, இருப்புப் பாதை சீரமைப்புதற்போது பயன்தரத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு 195 விபத்துக்கள் நடைப்பெற்ற நிலையில் இந்த ஆண்ட ு, 150 விபத்துக்கள் நடைப் பெற்றுள்ளன. டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா இரயிலில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலைத் தவிர வேறு பெரிய விபத்துக்கள் எதுவும் இந்த ஆண்டு மக்களைப் பாதிக்கவில்லை. இந்த ஆண்டு தட்கல் திட்டத்தை அனைத்து விரைவ ு, அதிவிரைவு இரயில்களில் 10 விழுக்காடு அளவு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர 30 விழுக்காடு இடங்களை தட்கல் திட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் அதிக வருவாய் திரட்டவும் இரயில்வே திட்டமிட்டுள்ளது.

கடந்த 2006-07 நிதியாண்டில் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ரூ. 39,669.25 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பாண்டில் இதே காலத்தில் ரூ. 44,472.14 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளத ு. இது கடந்து ஆண்டை விட 12.11 விழுக்காடு அதிகம். வழக்கமான வருவாய் திரட்டும் முறைகளைத் தவிர, முன்பதிவுபயணச் சீட்டுகளில் விளம்பரம் செய்ய அனுமதித்தத ு, இரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதித்தத ு, குர்குர் விரைவு இரயில்கள் இயக்கம் என பல்வேறு முறையில் வருவாயை இரயில்வே ஈட்டியுள்ளது.

மொத்தத்தில் இரயில்வே துறை முன்பைவிட பன்மடங்கு மக்கள் தேவைகளை நிறைவேற்றியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments