Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007ல் இர‌யி‌ல்வே மே‌ற்கொ‌ண்ட ப‌ணிக‌ள்!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (19:53 IST)
2007 ஆம் ஆண்டு இந்திய இரயில்வேயில் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்திய இரயில்வேயின் பொது மேலாளர்கள ், மண்டல மேலாளர்களை மேற்படிப்பிற்காக இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளத ு. அதோடு மட்டுமல்லாது தலைநகர் டெல்லியில் சர்வதேச இரயில்வே திறன் மேலாண்மை மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த மையம் பாரீஸில் உள்ள பன்னாட்டு இரயில்வே சங்கத்தின் உதவியுடன் வரும் 2010 -ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டு இரயில்வே துறைகளுக்குத் தேவையான மேலாளர்களை உருவாக்கும் இடமாக இந்தியா திகழப்போகிறத ு. கிழக்கு நோக்கிய கொள்கையின் ('' Look East Policy” ) ஒரு பகுதியாக இம்மண்டலத்தில் உள்ள இரயில் சேவையை பலப்படுத்துவது இன்றியமையாததாகிறது.

அதிலும் குறிப்பாக அண்டை நாடுகளான தெற்காசிய நாடுகள் முக்கியமானவை. இதன் ஒரு பகுதியாக ஐ.நா. தலைநகர் நியுயார்க்கில் ஆசிய நாடுகளை ( Trans-Asian Railway ) இணைக்கும் வகையில் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இரயில் பயணிகள ், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் கடுமையான கண்டனத்துக்கு ஆளான பொதுத் துறை நிறுவனமான இந்திய இரயில்வே உணவக - சுற்றுலா கழகம் டெல்ல ி, மும்ப ை, கொல்கத்தாஆகிய நகரங்களில் துறை சார்ந்த நவீனப்படுத்தப்பட்ட சமையல் அறைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த சமையலறைகளில் பன்னாட்டுத் தரத்தினாலான உபகரணங்கள் பயன்படுத்தவும ், தொழில் நுட்பத்திறன் கொண்டவர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய இரயில்வே உலகில் உள்ள இரயில்வேக்களில் இரண்டாவது பெரியதாகும். 2010 -ஆம் ஆண்டில் டெல்லியில் நடைப்பெறவுள்ள காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக டெல்லி இரயில் நிலையத்தை பன்னாட்டுதரத்திற்து தரம் உயர்த்த மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி இரயில் நிலையம் உள்பட நாடு முழுவதும் மேம்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தை செயல்படுத்தும் பொதுத்துறை - தனியார் இணைந்து மேற்கொள்ளும் பணியை கண்காணிக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்கவும் இரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.

பயணிகளுக்கு நவீ ன, மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் விதமாக ஒருங்கிணைந்ந இரயில் விசாரணை முறை அதாவது இரயில் சம்பார்க் அழைப்பு மையத்தை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

பொது தொலைபேசியில் இருந்து 139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். சந்தாதாரர்கள் கூடுதலாக இரயில்களின் வருக ை, புறப்படும் நேரம ், இருக்கை நிலவரம ், பயணத் தொகை போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய இரயில்வேத் துறை ரூ.28,000 கோடி மதிப்பில்அமைக்க திட்டமிட்டுள்ள தனி சரக்கு பாதை முன்னோடித் திட்டத்திற்கான இறுதிக் கட்ட அறிக்கையை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு குழுமம் வழங்கியுள்ளத ு. அதிகரித்து வரும் சரக்குகளைக் கையாள கிழக்கு மண்டலத்தில் 1,279 கி.மீட்டர் தூரத்துக்கும ், மேற்கு பகுதியில் 1,483 கி.மீட்டர் தூரத்துக்கும் தனியாக சரக்கு போக்குவரத்துக்கு என பாதை அமைக்கப்படவுள்ளது.

இரயில்வே பயணச்சீட்டு வழங்குவதற்காகவே தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் கருவிகளை மிக அதிக அளவில் இரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் உள்ள 682 நிலையங்களில் பாரத ஸ்டேட் வங்கி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை அமைக்க இரயில்வே கடந்த ஆண்டு அதனுடன் ஒப்பந்தம் செய்தது. மேலும் 711 இடங்களில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை அமைக்க 6 வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைக்கப்பட உள்ளது.

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் இரயில்வே சாதனை படைத்துள்ளது. ஒரு கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 887 பயணச்சீட்டுகளை இணையதளம் மூலம் விற்றுள்ளது. இதன் மூலம் 1,331 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நாளொன்றுக்கு 40,500 பயணச்சீட்டு என்ற நிலை கடந்த 3 மாதங்களில் 60,000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 83,000 பயணச் சீட்டுகள் நவம்பர் 13 -ம் தேதி இணைய தளம் இரயில்வே விற்பனை செய்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு உலகின் எந்தவொரு விமான சேவை நிறுவனமும் இதுவரை விற்றதில்லை.

முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில ், கிராமப் புறங்களில் கூட எளிதில் பயணச் சீட்டு பெற அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக பயணச்சீட்டு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டது. தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக நவம்பர் வரையில் 82 இரயில் நிலையங்களில் இணையதள மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்கள் தவிர மேலும் 24 இரயில் நிலையங்களில் விரைவில் தொடங்கப் பட உள்ளது.

வயர்லெஸ் தொழில் நுட்பத்தை 50 இரயில் நிலையங்களில்அறிமுகப்படுத்த இரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது பயணிகள் தங்கள் மடி கணினிகளையும ், மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 20 இரயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களின் போட்டியை எதிர்க்கொள்ளும் வகையில் ராஜதான ி, சதாப்தி இரயில்களில் பொழுதுபோக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் படி சதாப்தி இரயில்களில் ஒவ்வொரு இருக்கைக்கு பின்னும் தொலைக்காட்சி பெட்டி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments