Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணியில் எடப்பாடியாரின் சொந்த மாவட்ட பிரபலம். அதிர்ச்சியில் அதிமுக

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (05:53 IST)
122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட போதிலும், பெரும்பாலான அதிமுக தொண்டர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே ஆதரவு தெரிவித்து வருவதால் எந்த நேரமும் ஆட்சி கவிழும் அபாயம் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான  விஜயலட்சுமி பழனிச்சாமி நேற்று ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவருடன் சுமார் 1000 பேர் பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளனர். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே மதிமுக மற்றும் எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பன்னீர்செல்வம் அணிக்கு சமீபத்தில் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது விஜயலட்சுமி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஆதரவு கொடுத்திருப்பது இந்த அணியின் வலுவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments