சுதந்திர தின விழா; லட்டு வாங்க கூட ஆளில்லை : விஜயகாந்த் அப்செட்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:59 IST)
தேமுதிக சார்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மிகவும் சொற்ப அளவில் மட்டுமே கலந்து கொண்ட விவகாரம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
70வது சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
 
பொதுவாக, இதற்கு முன் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாக்களில், தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானோர்  கலந்து கொள்வது வழக்கம்.
 
ஆனால், சட்டமன்ற தேர்தலில், படுதோல்வியை தேமுதிக சந்தித்ததையடுத்து, ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதோடு, அதிமுக மற்றும் திமுக கட்சிக்கு தாவி வருகின்றனர்.
 
விழாவிற்கு வந்த விஜயகாந்த், தேசியக் கொடியை ஏற்றி, அங்கிருந்தவர்களுக்கு லட்டு வழங்கினார். ஆனால், அங்கு 50 பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்தனர். 
 
ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த விஜயகாந்த், இதுகண்டு, மிகவும் அப்செட் ஆகிவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments