Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை அழிக்க சதி செய்யும் தம்பிதுரை & ஓ.பன்னீர் செல்வம் அண்ட் கோ

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (16:41 IST)
இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலகளவில் உள்ள அரசியல் கட்சியினரின் இரங்கலை பெற்றது, நமது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவாகும்.


 


ஆனால், இந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்த இடத்தில் புல் கூட முளைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அ.தி.மு.க கட்சியை வேரோடு, உடைக்கவும், பா.ஜ.க விடம் அடகு வைக்கும் திட்டத்தில் தற்போது அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை களமிறங்கியுள்ளார். இது, புதிய அ.தி.மு.க  தொண்டர்களிடையே கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், தற்போது கிளம்பியுள்ளது.
 
இப்போது கடந்த இரு தினங்களாக சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனை என்னவென்றால் சசிகலாவிற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி கிடைக்க கூடாது என்றும், சசிகலாவின் கணவர் மீது ஏதாவது பழி சுமத்தி ஒரங்கட்டப்பட வேண்டுமென்றும் ரகசிய திட்டம் தீட்டி தம்பித்துரையும், முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் திட்டம் தீட்டி வருகின்றனர்.
 
ஒ.பன்னீர் செல்வம் தரப்பு தி.மு.க விடம் தஞ்சம் புகுந்து விடலாம் என்றும், ஆனால் தம்பித்துரை தரப்போ, தன்னுடைய கல்வி நிறுவனங்களை காப்பாற்ற மத்தியில் ஆளும் பா.ஜ.க விடம் அடகு வைத்து விடலாம் என்று கனவு காண்கின்றார். 
 
ஆனால் உண்மையாக முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால், என்ன நடவடிக்கை என்பது., மக்களுக்கும் அ.தி.மு.க -வினருக்கும் தெரியும்,
 
இதற்கிடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை குறி வைத்து வரும் குற்றச்சாட்டுக்களில் முதன்மையானது, சசிகலா குடும்பத்தினர் சம்பாதித்தது என்பதுதான். 
 
அது உண்மை என்றாலும் கட்சியின் செலவுக்கு செய்யப்படும் கோடிக்கணக்கான செலவுகளை ஜெயலலிதா உத்தரவு மூலமாக நிறைவேற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. 
 
ஆனால் தற்போது சசிகலா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுதான் மிக மோசமானது. ஜெயலலிதா மரணமடைந்ததற்கு காரணம் கூட சசிகலா என்று சொல்வதுதான், எந்திரன் படத்தில் ரேமோ ரஜினி கருப்பு ஆடு என்று உண்மையான ரஜினி மீது கைவைத்து பேசுவது போல த்ரில்லான படம் பார்த்து ரசிக்கும் சினிமா மோகமுள்ள பாமர மனிதன் நிச்சயம் நம்புவான் என தெரிந்தே அந்த வதந்திகள் பரப்பபட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுதான் மிகப்பெரிய அரசியல் சதுரங்கம்.


 

 
காரணம். ஜெயலலிதா மரணமடைந்ததால் அதிமுக என்ற கட்சியை யாராலும் காப்பாற்றவோ அல்லது வழி நடத்தவோ முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. ஒருவேளை யாராவது அக்கட்சிக்கு உயிர் கொடுக்க முடிந்தால் அது சசிகலா என்பவரால்தான் முடியும் என அனைவருக்கும் தெரியும் அதனால்தான் அதிமுகவின் வருங்காலத்தை கேள்விக்குறியாக்க அதிகாரங்களை குறி வைக்கும் அல்லது அதிகாரம் இவர்கள் கைகளுக்கு கிடைக்க கூடாது என நினைக்கும் படைகள் சசிகலாவின் மேல் வதந்தியை பரப்ப முயல்கிறது. இன்றும் பரப்பி வருகின்றது. சசிகலா உறவினர்களுடைய வீடுகள் மீது வருமான வரித்துறையினர் ரைடு என்பது, முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நடந்திருக்க வேண்டுமென்பது அல்லவா.. தற்போது ஏன் ? இவர்களின் இரண்டு திட்டம் வெளியே வருகிறது
 
சசிகலாவை தவிர யார் கைக்கு அதிமுக போனாலும் எளிதாக அதிமுக வை முடக்கி விடலாம் ஆனால் எக்காரணத்தை கொண்டும் சசிகலா கைக்கு போக கூடாது என நினைக்கிறதாம் திமுக.
 
அதனால் ஸ்டாலின் மருமகன் மூலம் சில அஸைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். முதலாவது சசிகலாவை யாரும் ஏற்றுக் கொள்ளாமல் செய்வது அதை முகநூல் திமுக வினர் மிக திறமையாக கையாண்டு வருகின்றனர். அதே வேளையில் வெளியேவும் அதை செய்ய ஜெயலலிதாவால்  அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி எம்எல்ஏ சசிகலாபுஷ்பாவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நேற்று முன் தினமே (7-12-16) அதையும் ஆரம்பித்து விட்டார்கள் கலைஞர் குடும்பத்திற்கு சொந்தமான சன் தொலைக்காட்சி சசிகலாபுஷ்பாவை பேட்டி எடுத்தது அது முழுக்க முழுக்க சசிகலாவை தாக்கியதாகவே செயல்பட்டது.


 

 
இரண்டாவது அதிமுக விசுவாசிகளை கைப்பற்றுவது. அதற்கு முதல்படியாக திமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதும் ஜெயலலிதாவை புகழ்ந்து திமுக தலைமை மட்டுமல்ல அனைத்து தொண்டர்களையும் பேச வைப்பதும். இதன் மூலம் ஜெயலலிதா விசுவாசிகள் சசிகலாவை எதிர்க்கும் மனநிலையை உருவாக்கி அதை தங்கள் பக்கம் திருப்பும் வேலையை கச்சிதாக செய்து வருகின்றனர்
 
பல பத்திரிக்கைகள் மூலமும் சசிகலாவை ஜெயலலிதா மரணத்தில் இழுத்து விட முயற்சி நடக்கிறதாம். ஜெயலலிதா மரணத்தை தாங்க முடியாமல் ஏதாவது காரணம் தேடும் இயல்பான மனிதர்கள் இருக்கும் வரை இவர்கள் திறமையாக அரசியல் செய்வார்கள் அவர்களின் சோகத்தை சரியாக பயன்படுத்தி சில க்ரைம் நாவலை போல சித்தரிக்கப்பட்டதை திணித்து விடுவார்கள் சினிமாக்களில் ஒருவர் மரணத்திற்கு பின் சில அதிகார மையங்கள் மறைப்பதாக அதிகளவில் காட்சிப்படுத்தியே வந்ததை பார்த்து வந்த நம்மக்களுக்கும் இது உண்மைதான் அதைதான் சினிமாவாக எடுக்கிறார்கள் என்ற ரேஞ்சுக்கு சிந்தனை சென்று விடுகிறது


 

 
இன்னும் சில திட்டங்களை திமுக கையில் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசிகள் பலரை அதிமுக விலிருந்து வெளியேற்றி ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் சசிகலாதான் என சொல்ல வைக்கவும் திட்டம் தீட்டப்படுகிறது
 
ஒரு வேளை அதிமுக சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கினால் அந்த கூட்டத்திலேயே அதற்கு எதிராக சண்டையிடவும் விசுவாசிகளை கொம்பு சீவும் காய்களை நகர்த்தி வருகிறார்களாம்
 
உண்மையான அ.தி.மு.க வினர் என்ன நினைக்கின்றார்கள் என்றால்.,  அம்மாவால் கட்டிகாக்கப்பட்ட அதிமுக வை அவரின் பரம எதிரியும் தமிழ்நாட்டின் தீயசக்தி என ஜெயலலிதாவால் சொல்லப்பட்ட கருணாநிதி குடும்பத்தின் திட்டத்திற்கும் பலியாகி வருவது என்னமோ அதிமுக விசுவாசிகளே! 


 

 
ஆகவே தம்பித்துரையின் கூட்டணியில் முதல்வர் ஒ.பி.எஸ் இணைந்து பா.ஜ.க நாடகத்திற்கு தயாராகி உள்ள நிலையில்,  பா.ஜ.க-விற்கு அடகு வைக்கும் தம்பித்துரையின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும், இல்லையென்றால் அவரது கணவர் நடராஜனுக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு., இல்லாத பட்சத்தில் கொங்கு சமுதாய இளைஞரிடம் பொறுப்பை ஒப்படைத்து ஒட்டு மொத்த அதிமுக என்ற கழகம் தமிழகத்தில் செயல்பட வேண்டும். 
 
அதுமட்டும் அல்ல, எம் ஜி ஆர் இறந்த போது கூட அதிமுக உடைக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டது. அந்த திட்டத்திற்கு மூல பிள்ளையார் சுழி போட்டவர்கள் ஜானகி அணிக்கு சென்ற தம்பித்துரையும், ஒ.பி.எஸ்-சும் தான், 
 
இந்த நிலையில், எப்போதும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக துரோகம் செய்தார்கள். தற்போதும் முதல்வர் ஜெயலலிதா இறந்தும் அ.தி.மு.க விற்கு கொடுமைகள்  செய்கின்றனர். எது எப்படியோ, கடற்கரையோரம் துயிலாடும் அம்மாவை மீண்டும் எழுப்பி விடாதீர்கள் என்று கட்சியின் உண்மை விசுவாசிகள் கரூர் தம்பித்துரைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் செய்தியாளர் - சி.ஆனந்தகுமார் வழங்கியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments