Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர் செல்வத்துக்கு எதிராக தம்பிதுரை: முதல்வர் பதவியை சசிகலா ஏற்க வலியுறுத்தல்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2017 (12:05 IST)
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


 

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அம்மா வழியில் இம்மி அளவும் பிசகாமல் நடப்போம் என்றார். இந்த சூழ்நிலையில்  அவர் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

சசிகலாவை முதல்வராக ஏற்க மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே தங்களது ஆதரவு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். என்னை போன்ற தொண்டர்களின் கோரிக்கையை அவர் ஏற்கவேண்டும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments