Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அதிமுக பொதுக்குழு: ஆனால் சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (02:50 IST)
பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சசிகலா இதுவரை ஒப்புதல் தரவில்லை அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், ”தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதன்படி, அதிமுகவின் பொதுக் குழு கூட்டம், நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை யாரும் அந்த பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மனு தாக்கலும் செய்யவில்லை.

பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என, கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.

அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அன்பு மிகுதியால் கட்சியினர் அவ்வாறு அழைத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments