Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஸ்டத்தை மாற்ற ரஜினி முடிவு: ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (05:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டாராம். முதலில் ரஜினியின் இலக்கு உள்ளாட்சி தேர்தல் என்றும், அதில் ரசிகர்களை களமிறக்கி நோட்டம் பார்த்து, மக்களின் நாடியுணர்வை புரிந்து கொண்டு அதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் என்றும் முடிவு செய்துள்ளாராம்.



 


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே சில முக்கிய வேட்பாளர்களை ரஜினி முடிவு செய்துவிட்டாராம். அவர்களில் ஒருவர் சென்னை தி.நகரில் ஓட்டல் வைத்திருக்கும் ராமதாஸ் என்கின்றனர் ரஜினி தரப்பினர்

மேலும் தேர்தலுக்காக அதிகமாக கைக்காசை செலவு செய்ய வேண்டாம் என்றும், மக்களிடம் நல்ல திட்டங்களை ஒரு பிட் நோட்டீஸ் மூலம் கொண்டு செல்லுங்கள், அந்த திட்டம் நன்றாக இருந்தால் நிச்சயம் நமக்கு ஓட்டு விழும் என்றும் அறிவுரை கூறுகின்றாராம்.

மேலும் கண்டிப்பாக யாரிடமும் தேர்தலுக்காக டொனேஷன் வாங்க வேண்டாம் என்றும், அவ்வாறு வாங்கினால் பின்னாள் அவர்கள் நம்மிடம் சலுகைகளை எதிர்பார்ப்பார்கள் என்றும் கூறுகின்றாராம். முதன்முதலாக காமராஜருக்கு பின்னர் சிஸ்டத்தை மாற்றும் ஒரு நல்ல அரசியல் தலைவன் தோன்றியிருப்பதாக ரஜினி ரசிகர்கள் பெருமைப்படுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்