Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்: ஈபிஎஸ் அதிரடியால் பரபரப்பு

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (05:41 IST)
சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி ஈபிஎஸ் அணிக்கு தாவியதில் இருந்தே ஓபிஎஸ் அணியினர் பரபரப்பில் உள்ளனர். மேலும் ஆறுக்குட்டிக்கு ஈபிஎஸ் அணியினர் ஒரு புரொஜெக்டை கொடுத்துள்ளதாகவும், அதன்படி ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைவரையும் அவர் அழைத்து வந்தால் அவருக்கு வெயிட்டான ஒரு பதவி அளிக்கப்படும் என்பதுதான் அது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன



 
 
இதன் காரணமாக ஓபிஎஸ் அணியில் உள்ள மாபா பாண்டியராஜன் உள்பட அனைவரிடமும் ஆறுக்குட்டி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் ஓபிஎஸ் கூடாரமே காலியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
‘இன்னும் ஆறு மாதங்களில் பன்னீர் பழையபடி டீக்கடையில்தான் போய் உட்கார வேண்டும்’ என்று பழ.கருப்பையா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார். அது விரைவில் உண்மையாகிவிடும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் அணிகளை இணைக்கும் வேலையை ஒரு மாதத்தில் முடியுங்கள்; இல்லையென்றால் நான் அணி மாறிக் கொள்கிறேன்’ என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேரடியாகவே ஓபிஎஸ் அவர்களிடம் கூறியதாகவும் வதந்தி பரவி வருகிறது. 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments