Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை சின்னம் முடக்கம். ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிக்கை

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (01:36 IST)
இரட்டை இலை சின்னத்தை நேற்று தேர்தல் ஆணையம் இரு அணிகளுக்கும் கிடையாது என்று கூறி முடக்கியதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அணியினர் தீவிர ஆலோசனை செய்தனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பின்னர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:



 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புரட்சித்தலைவர் உருவாக்கிய, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தமிழ்மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments