Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: தீபா அதிரடி

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2017 (19:02 IST)
ஜெயலாலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளாரக தேர்ந்தெடுக்க சசிகலாவுக்கு அதிமுக பெண் தொண்டர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஒருபக்கம் தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தீபா கூறியுள்ளார்.


 

 
ஜெயலாலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளாரக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெர்வித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக பெண் தொண்டர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற்னர்.
 
அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு அதிமுக தொண்டர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அடுத்து அவரது இடத்தில், தீபா தான் அமர வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தி.நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். பால்கனியில் இருந்து தொண்டர்களிடம் பேசிய தீபா, என் அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன் தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு இணையே இல்லை. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன், என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments