Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனை திடீரென சென்னையில் இருந்து இடம் மாற்றும் டெல்லி போலீஸார்! காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (06:21 IST)
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரனை நேற்று டெல்லி போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். சென்னை அடையாறு வீட்டில் ஆறு மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் பின்னர் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவிடம் அவருடைய அண்ணாநகர் வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்



 


இருவரிடமும் விசாரணையை முடித்த டெல்லி போலீசார் பின்னர் இருவரையும் பாதுகாப்பாக பெசன்ட்நகரில் உள்ள ராஜாஜி பவனில் இரவில் தங்கவைத்தனர்.

இந்நிலையில் அடுத்தகட்ட விசாரணைக்காக தினகரனையும், அவரது நண்பரையும் பெங்களூரு அழைத்துச் செல்ல டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெங்களுரில் விசாரணை முடிந்தவுடன் கொச்சிக்கு அழைத்துச் சென்று, இடைத்தரகர்கள் மூலம் பணம் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெறும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னையில் மட்டுமே மூன்று நாட்கள் விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரே நாளில் விசாரணையை முடித்தது ஏன் என்று தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது.. ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதலா?

சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் சர்வதேச பார்சல்கள் நிறுத்தம்.. அமெரிக்கா அதிரடி

இன்னும் 2 வாரங்களுக்கு பனிமூட்டம் இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

போலி ஆவணம் தயாரித்து கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது புகார்! - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

'காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments