Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.ராதாகிருஷ்ணனுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (07:00 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகளிலும் இருக்கும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை நேற்று திடீரென மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை தனியாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ இன்பதுரை கூறியதாவது: மத்திய நெடுஞ்சலைத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கோட்டையில் சந்தித்தேன். எனது ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி வழியாக செல்லும் நான்கு வழிப்பாதையில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, பணகுடி நகரின் நான்கு வழிச்சாலையில் இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் கூறினேன். இந்த சந்திப்பில் வேறு விசேஷம் எதுவும் இல்லை"
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments