Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜஸ்தான் அபார பவுலிங்; கிங்ஸ் லெவன் பஞ்சாப் 145 ரன்!

ராஜஸ்தான் அபார பவுலிங்; கிங்ஸ் லெவன் பஞ்சாப் 145 ரன்!
, வியாழன், 9 மே 2013 (17:46 IST)
FILE
மொஹாலியில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள் அதிரடியாளர்கள் நிரம்பிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை 20 ஓவர்களில் 145 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார்.

கடைசி 5 ஓவர்களில் 38 ரன்களே எடுக்க முடிந்தது 3 விக்கெட்டுகள் விழுந்தன. அனைத்தையும் விட முக்கியமனது. வாட்சன், கூப்பர், பாக்னர் அபாரமாக ஸ்லோ பந்துகளையும் தினுசு தினுசாக வீசி கடைசி 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் செய்தனர்.

கூப்பர் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வாட்சன் மேலும் கஞ்சத்தனமாக 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களையே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஸ்பின்னர் சண்டிலா 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து முதல் ஓவரின் 3வது பந்தில் மந்தீப் சிங்கை 0-வில் வீழ்த்தினார்.

ஆனால் அதன் பிறகு ஷான் மார்ஷ், கில்கிறிஸ்ட் இணைந்தனர். இருவரும் இணைந்து 13 ஓவர்களில் ஸ்கோரை 102 ரன்களுக்கு உயர்த்தினர். கில்கிற்ஸ்ட் 32 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து கூப்பரின் ஸ்லோ பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷான் மார்ஷ் மீண்டும் அற்புதமாக விளையாடி 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து இதே கூப்பர் பந்தில் பவுல்டு ஆனார். 136/4, 18.4 ஓவர்களில். அதிரடி மன்னன் மில்லருக்கு வாட்சன், கூப்பர் மிகத் துல்லியமாக வீசியதால் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெறுப்பில் கூப்பர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேற ஸ்கோர் ஏறவில்லை.

அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் இலக்கைத் துரத்தக் களமிறங்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil