Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜவான் படத்துக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் சேதுபதி அட்லி கூட்டணி!

ஜவான் படத்துக்கு பிறகு மீண்டும் இணையும் விஜய் சேதுபதி அட்லி கூட்டணி!

vinoth

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:29 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகக் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அட்லி தன்னுடைய ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், இயக்குனராக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் பணியாற்ற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  விஜய் சேதுபதி அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்பட நடிகரை மணக்கும் அபர்ணா தாஸ்!