Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்லி அல்லு அர்ஜுன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!

vinoth

, புதன், 3 ஏப்ரல் 2024 (10:50 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகக் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறும்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஹரியின் மகன்!