கொரோனா 3 ஆம் அலையின் ஆரம்பக் கட்டத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்
கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும், பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்
டெல்டா வைரஸ் 111 நாடுகளில் பரவி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் விரைவில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்
உலக அளவில் 10 வாரங்கள் தொடர்ந்து கொரோனா குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வாரங்களாக கொரோனா பரவும் எண்ணிக்கை அதிகரித்து இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்