Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, பிரேசில், இந்தியா: ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (07:01 IST)
அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் நேற்று ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67,406 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இதனையடுத்து அந்நாட்டின் மொத்த பாதிப்பு 3,694,948 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 141,117 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் பிரேசிலில் ஒரே நாளில் 43,829 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர் என்பதும், இதனால் அந்நாட்டின் மொத்த பாதிப்பு 2,014,738 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 76,822 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 35,468 பேர் பாதிப்பு என்பதும் இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு 1,005,637 என்பதும், இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 25,609 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,39,30,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 591,865 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,265,570 பேர் குணமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments