ஏதோ பெருசா ப்ளான் பண்றாங்க! ரஷ்யா - வடகொரியா ரகசிய திட்டம்! - எச்சரிக்கும் தென்கொரியா!

Prasanth K
வெள்ளி, 27 ஜூன் 2025 (10:22 IST)

உலக அளவில் பல நாடுகளுக்கு இடையே ஆங்காங்கே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவும், வடகொரியாவும் பெரிய போர் தாக்குதலுக்கு ஆயத்தமாவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது. அவ்வாறாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீன், இஸ்ரேல் - ஈரான், இந்தியா - பாகிஸ்தான் போர்கள் உலக அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் அனைத்து நாடுகளிடையேயும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டார். அது மேம்போக்காக பூச்சு போல அமைந்தாலும் உள்ளே போர் மேகங்கள் கனன்று கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் போர் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக வடகொரியாவில் இருந்து ராணுவ வீரர்களை ரஷ்யா இறக்கி இருந்தது.

 

இந்நிலையில் தற்போது ரஷ்யாவும், வடகொரியாவும் சேர்ந்து மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக தென்கொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவிடம் இருந்து கூடுதல் படைகள், ஆயுதங்களை இறக்கி மொத்தமாக உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் இந்த தாக்குதல் நடக்கலாம் என தென்கொரியா கருதுகிறது.

 

அப்படி நடந்தால் இரண்டு நாடுகள் கூட்டு முயற்சியில் ஒரு நாட்டை வீழ்த்துவது உலக அளவிலான யுத்த பதற்றத்தை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இதனால் நாடுகள் அணி சேரத் தொடங்கினால் உலகப்போர் போன்ற பெரும் அபாயங்கள் ஏற்படக்கூடும் என உலகளாவிய அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments