இலங்கை அதிபர் தேர்தலில் தற்போது கோத்தபய ராஜபக்ஷே முன்னிலையில் இருக்கிறார்.
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணி அளவில் முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த வாக்கு எண்ணிக்கையில் பொதுஜன முன்னணி கட்சியை சேர்ந்த கோத்தப்பய ராஜபக்ஷேவும், புதிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாசவும் மாறி மாறி முன்னிலையில் வந்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய தகவல் படி கோத்தப்பய ராஜபக்ஷே, சஜித் பிரேமதாசவை விட 37,000 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சஜித் பிரேமதசா ராஜபக்ஷேவை விட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். மேலும் தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.