Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.990 கோடி மதிப்புள்ள பங்களாவில் ரகசிய காதலியுடன் வசிக்கும் அதிபர் புதின்!

ரூ.990 கோடி மதிப்புள்ள பங்களாவில் ரகசிய காதலியுடன்  வசிக்கும் அதிபர் புதின்!
, வியாழன், 2 மார்ச் 2023 (20:31 IST)
ரஷிய அதிபர் புதின் தன் ரகசிய காதலி மற்றும்  குழந்தைகளுடன் ரூ.990 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசிப்பதாக தகவல் வெளியாகிறது.

ரஷிய நாட்டில், கடந்த 1999 ஆம் ஆண்டு போரிஸ் யெல்ட்சின் பதவி விலகலை அடுத்து, அதிபராகப் பதவிக்கு வந்தவர் புதின்.  இதையடுத்து அடுத்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முறைப்படி மீண்டும் தலைவரானார்.

அப்போது, அதிபருக்கான சட்டவிதிமுறைகளை தனக்கேற்றபடி திருத்திக்கொண்டு, நீண்ட நாட்களாக ஆட்சிப் பதவியில் இருப்பதாக புதின் மீது பலரும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,கடந்தாண்டு, உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் திடீரென்று போர் நடத்தியதை அடுத்து, ரஷியாவுக்கு எதிரான அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
webdunia

ஆனால், இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், இன்னும் உக்ரைனை கடுமையான தாக்கி வருகிறது ரஷிய ராணுவம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ரஷிய அதிபர் புதின், ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா(39) என்ற தன் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு ஆடம்பர பங்களாவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இப்போரை தொடங்கும் முன்பே தன் மனைவி மற்றும் குழந்தைகளை இபிதின் சுவிட்சர்லாந்தின் உள்ள ஒரு பகுதிக்கு அனுப்பிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், ரஷியா- மாஸ்கோ நகரின் வால்டாய் ஏரியை ஒட்டியுள்ளயுள்ள பகுதிகளை அதிக விலைக்கு வாங்கிய புதின், 2020 ஆம் ஆண்டு அங்கு ஒரு பண்ணை வீடு கட்டியுள்ளதாகவும், 13 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களா ரூ.990 கோடி மதிப்பில், 2 ஆண்டுகளில் கட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

இங்குதான், அதிபர் புதின் தன் மனைவி அலினா கபேவா, குழந்தைகளுடன் ரகசியமாக வசிப்பதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது: ஈபிஎஸ் கண்டனம்..!