நமீபியாவில் உற்சாக வரவேற்பு.. டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி..!

Siva
புதன், 9 ஜூலை 2025 (13:13 IST)
பிரதமர் மோடி பிரேசில் பயணத்தை முடித்துவிட்டு நமீபியா சென்ற நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், பாரம்பரிய முறைப்படி டிரம்ஸ் கலைஞர்கள் இசையமைத்த நிலையில், அந்த டிரம்ஸையும் பிரதமர் மோடியும் வாசித்து மகிழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பிரதமர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடா, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். கடைசியாக பிரேசில் பயணத்தை முடித்து கொண்டு இன்று நமீபியா நாட்டுக்கு சென்ற பிரதமருக்கு அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி நேரில் வந்து வரவேற்பு அளித்தார். 
 
மேலும், பாரம்பரிய முறைப்படி கலைஞர்கள் டிரம்ஸை வாசித்த நிலையில், அதை பார்த்த பிரதமர் உற்சாகமாகி அவரும் டிரம்ஸ் வாசித்தார். அதன்பின் நமீபிய அதிபருடன் இருதரப்பு முக்கிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், நமீபியா நாட்டின் பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
முன்னதாக பிரதமர் மோடி பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments