பாலஸ்தீனம் தனிநாடு அங்கீகாரம்! அதிகரிக்கும் ஆதரவால் அதிர்ச்சியில் இஸ்ரேல்!

Prasanth K
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (12:26 IST)

பாலஸ்தீனம் தனி நாடு கோரிக்கைக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது பிரான்ஸும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே எழுந்த போரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதை இனப்படுகொலை என பல நாடுகளும் விமர்சித்துள்ள நிலையில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதுதான் இஸ்ரேலின் ஆதிக்கக் கரங்களில் இருந்து பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிக்கும் என குரல்கள் எழுந்துள்ளன.

 

ஐ.நா சபையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் குறித்த உலக நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடந்து வரும் நிலையில், அதில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. அதை தொடர்ந்து தற்போது பிரான்ஸும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.

 

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவது அதற்கு அளிக்கப்படும் சலுகை அல்ல. மாறாக 2 நாடுகள் என்பது மட்டும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து பாலஸ்தீன தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவுகள் அதிகரித்து வருவது இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments