Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் இணை நிறுவனர் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்..!

மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் இணை நிறுவனர் காலமானார்! உலக தலைவர்கள் இரங்கல்..!
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:32 IST)
மைக்ரோசாஃப்டில் உள்ள முக்கிய அம்சமான பவர் பாயிண்ட் உருவாக்கிய டெனிஸ் ஆஸ்டின் நுரையீரல் புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
கணினி மென்பொருள் துறையில் பவர் பாயிண்ட் என்பது மிகவும் முக்கியமானது. இதை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் டெனிஸ் ஆஸ்டின். கடந்த 1987 ஆம் ஆண்டு  பவர் பாயிண்ட் என்ற மென்பொருளை உருவாக்கினார். அதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டாலருக்கு அவர் விற்பனை செய்தார். 
 
உலகிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும்  பவர் பாயிண்ட் என்ற மென்பொருளை கண்டுபிடித்த டெனிஸ் ஆஸ்டின் நேற்று காலமானார்.  நுரையீரல் புற்றுநோய்க்கு கடந்த சில மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானதாக அவரது மகன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமைத் தொகை ரெடி! எத்தனை பேருக்கு? – முதல்வர் அறிவிப்பு!