ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (11:36 IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது என்பதும், குறிப்பாக ஆப்பிள் ஸ்டோரை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சூறையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரை உடைத்து பொருள்களை திருடி சென்றதாகவும், கட்டிடத்தின் மீது அமெரிக்க அரசுக்கு எதிரான சுவரொட்டிகளை வரைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
அடிடாஸ், மருந்தகம், மரிஜுவானா விற்பனை நிலையம் உள்பட பல இடங்களில் கொள்ளை நடந்துள்ளதாகவும், ஒரு நகைக்கடையும் சூறையாடப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ள நிலையில், இந்த வன்முறை தற்போது கொள்ளையாகவும் மாறி உள்ளதை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 
 
தனியார், பொது சொத்துக்களை சூறையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அவர் 700 ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments