Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி: முதல் டோஸை எடுத்து கொண்ட ஜோபைடன்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:16 IST)
முதல் டோஸை எடுத்து கொண்ட ஜோபைடன்!
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும் சுமார் 7 கோடிக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி நேற்று முதல் பொது மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அவர்கள் முதல் டோஸை தானே எடுத்துக் கொண்டு ஒரு முன்னுதாரணமாக இருந்தார் இதனை அடுத்து அந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது 
 
சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடன் தடுப்பூசி முதல் டோஸ் அவருக்கு செலுத்தப்பட்டது. இந்த டோஸை எடுத்துக் கொண்டபின் பேசிய ஜோபைடன், ‘ தடுப்பூசி மருந்து கிடைக்கும் போது அதை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்
 
மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஒரு நாட்டின் அதிபர் முன்னுதாரணமாக தானே முதல் டோஸை எடுத்துக்கொண்டது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments