வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

Siva
செவ்வாய், 27 மே 2025 (18:55 IST)
ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கவோ, அல்லது ஊழியரை நீக்கவோ HRன் முக்கிய பணி என்ற நிலையில், "நான் HRஐயே ஐபிஎம் நிறுவனம் வேலைவிட்டு நீக்கியுள்ளது" என கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதில் பெரும்பாலும் HR துறையைச் சார்ந்தவர்களே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
 
ஏற்கனவே, 200க்கும் மேற்பட்ட HRகளை கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம், தற்போது மேலும் HR துறையை சேர்ந்தவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
 
தற்போது ஏ.ஐ. (AI) மூலமாகவே பெரும்பாலும் பணியமர்த்தல் நடைபெறுவதால், HR வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதில்லை என்றும், அதனால் தான் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
இன்னும் சில ஆண்டுகளில், முழுக்க முழுக்க HR துறையை ஏ.ஐ. ஆக்கிரமித்து விடும் என கூறப்படுவது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments