Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியை ஏற்க முடியவில்லை: ஹிலாரி உருக்கம்!!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:55 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். 


 
 
தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் தெரிவித்து இருந்தார். இ-மெயில் விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார்.
 
ஒரு வாரமாக வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 
 
அப்போது ஹிலாரி, ”இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக அமைந்திருக்கவில்லை. பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். பலருக்கும் தேர்தல் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம். எனக்கும் அதே நிலை தான் இருந்தது. தோல்வியால் நான் துவண்டுவிட்டேன். இதை ஏற்றுக்கொள்வது எளிதானதாக தெரியவில்லை. நான் இந்த தேர்தல் மூலம் அமெரிக்க மக்களின் ஆன்மாவை புரிந்து கொண்டேன்” என உருக்கமாக தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments