இங்கிலாந்து டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி.. இந்திய தேயிலையில் தயாரித்த டீ..!

Siva
வெள்ளி, 25 ஜூலை 2025 (12:58 IST)
இங்கிலாந்துக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஒரு தேநீர் கடையில் இந்திய தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீரை குடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும்,  'செக்கர்ஸ்' என்ற தேநீர் கடையில் தேநீர் கோப்பையை பகிர்ந்துகொண்டனர்.
 
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முனைவோர் அகில் படேல் என்பவர் தேநீர் கடையை அமைத்திருந்தார். இரு தலைவர்களும் அங்கேதான் தேநீர் அருந்தினர்.
 
இரு தலைவர்களும் தனது கடைக்கு வந்ததும், அகில் படேல் உற்சாகத்துடன் தனது தேநீர் குறித்து விளக்கினார். தனது கடையில் தயாரிக்கப்படும் தேயிலை இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், தேநீர் தயாரிக்கும் முறையையும் அவர்களிடம் கூறி, "தேயிலை அசாமில் இருந்தும், மசாலாப் பொருட்கள் கேரளாவில் இருந்தும் வருகின்றன" என்று எடுத்துரைத்தார்.
 
அதன் பிறகு, இரு தலைவர்களுக்கும் அவர் தேநீர் கொடுக்க, இருவரும் தேநீரை சுவைத்து சாப்பிட்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.
 
இந்த நிகழ்வின் உச்சகட்டமாக, அகில் படேல் பிரதமர் மோடியிடம் தேநீர் கோப்பையை கொடுத்தபோது எடுத்த புகைப்படத்திற்கு ஒரு காலத்தில் டீ விற்பனையாளராக இருந்த மோடிக்கு, தற்போது ஒரு டீ விற்பனையாளரே தேநீர் கொடுக்கிறார் என்ற கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments